Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
You can speak English easily from today!
இன்றிலிருந்தே உங்களாலும் இலகுவாக ஆங்கிலம் பேச முடியும்!
ஆங்கில மொழியைப் பொறுத்தளவில் இம் மொழியைக் கற்பிக்கவென காலாகாலமாக இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒன்று, ஆங்கிலம் இலக்கணம் - English Grammar. மற்றது, பேச்சு ஆங்கிலம் - Spoken English.
ஆயினும், இவ்விரண்டு முறைகளுமே இன்று நீண்ட காலத்தை எடுப்பதுடன் மாணவர்கள் மத்தியில் கற்றுக் கொள்வதற்கும் சிரமமான முறைகளாகவும் காணப்படுகின்றன. எனவே, மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது.
இதனைப் போக்கி, மாணவர்கள் மிக இலகுவாகவும் விரைவாகவும் ஆங்கிலத்தைக் கற்று உடனடியாகவே பேசக் கூடிய விதமாக புதிய அதி நவீன முறையொன்றினை மிக நீண்ட கால ஆய்வுகளின் பின் நாம் வடிவமைத்து அறிமுகப்படுத்தி, அதில் பாரிய வெற்றியையும் கண்டு வருகின்றோம். இப் புதிய அதி நவீன முறையின் மூலம் மாணவர்கள் உடனடியாகவே ஆங்கிலத்தை இலக்கணப் பிழைகள் எதுவுமின்றி தூய இலக்கணத்துடன் பேசக் கூடியதாக உள்ளது, இதன் சிறப்பம்சம் மட்டுமன்றி இதன் வெற்றிக்கான காரணமும் ஆகும்.
இதனை நாம் மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்காக இந் நவீன முறையினை ஆரம்பித்துள்ளோம். நாம் எவ்வாறு கற்பிக்கின்றோம் என்பதனை இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரி பாடங்களிலிருந்தும் மாதிரி பாடக் குறிப்புகளிலிருந்தும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நாம் நிறைய விளக்கங்களை தமிழில் மாணவர்களுக்கு அளிப்பதால் அவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதுடன் உடனடியாகவே ஆங்கிலத்தைப் பேசவும் முடிகின்றது.
தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் - சில வித்தியாசங்கள்
ஆங்கில மொழியைக் கற்க ஆசைப்படுபவர்கள் முதலில் அம் மொழியைப் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அதேவேளை தாம் பேசும் தமிழ் மொழியைப் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகும். அப்போதுதான், தாம் பேச நினைப்பதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்து வதற்கு ஏற்ற விதமான சரியான சொற்களைத் தெரிவு செய்யவும், சொல்ல வேண்டிய அமைப்பு முறைகளை சரியாக அறிந்து கொள்ளவும் முடியும். எனவே, நாம் இங்கு தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்குமிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஓர் அட்டவணை மூலம் மிகச் சுருக்கமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
|
|
தமிழ் மொழி |
ஆங்கில மொழி |
|
எழுத்துக்கள் |
256 மேல் |
26 மட்டுமே |
|
பெயர்ச் சொற்கள் |
மாற்றமடைகின்றன. உதாரணம்:- சுவர், சுவரை, சுவரில், சுவருக்கு |
மாற்றமடைவதில்லை. மாறாக, in, to போன்ற Preposition கள் அச் சொற்களின் முன்னால் இடப்படுகின்றன. The wall, in the wall, to the wall The letter, in the letter, to the letter |
|
வினைச் சொற்கள் |
44 விதத்திற்கு மேலாக மாற்றமடைகின்றன. போகாதே,போகும்,போகா,போகின்ற, போன,போய்க்கொண்டு,போய், போகின்றேன்,போனேன்,போவேன், போகின்றான்,போனான்,போவான், போகின்றோம்,போனோம்,போவோம்.... என 44 விதத்திற்கு மேலாக மாற்றமடைகின்றன. |
4 விதமாக மட்டுமே மாற்றமடைகின்றன. உதாரணம்:- go, going, went, gone |
|
பிரதிப் பெயர்ச் சொற்கள் |
பலவிதமாக மாற்றமடைகின்றன. என்னை, என்னிடம்,எனக்கு,என்னால், |
மாற்றமடைவதில்லை. மாறாக, to, by போன்ற Preposition கள் அச் சொற்களின் முன்னால் இடப்படுகின்றன. me, to me, by me him, to him, by him |
|
வாக்கிய அமைப்பு |
எழுவாய், செயப்படுபொருள்,பயனிலை தமிழ் மொழியில் வாக்கியங்கள் ஓர் எழுவாயைக் கொண்டு ஆரம்பித்தாலும் பயனிலை வினைச் சொல்லானது வாக்கியத்தின் இறுதியிலேயே அமைகின்றது. |
எழுவாய்,பயனிலை,செயப்படுபொருள் ஆங்கில மொழியில் வாக்கியங்கள் ஓர் எழுவாயைக் கொண்டு ஆரம்பித்தாலும் உடனடியாகவே (பெரும்பாலும் இரண்டாவது சொல்லாக) பயனிலை வினைச் சொல் அமைகின்றது. |
|
வாக்கிய இணைப்பு |
"நான் போனேன்", "நான் வந்தேன்" |
"I went", "I came" இந்த இரண்டும் இணைந்து ஒரு வாக்கியமாகும்போது ஆங்கில சொல் மட்டுமே அவற்றை எவ்வித மாற்றமுமின்றி |
|
சொற்களின் இணைப்பு |
"புத்தகம்", "பேனா" |
"The book", "The pen" இந்த இரண்டும் இணையும்போது மாற்றமுமின்றி "The book and the pen" என இணைக்கின்றது. |
|
உயர்திணை, அஃறிண
|
தமிழ் மொழியில் மனிதர்களை உயர்திணை எனவும் பெயரிட்டு அவற்றிற்கேற்ப வினைச் சொற்களை பிரயோகிக்கின்றோம். |
ஆங்கில மொழியில் மனிதர்களா, உயிருள்ளவையா, உயிரற்றவையா என பார்ப்பதில்லை. யார் என்ன செய்தாலும் ஒரே விதமான வினைச் சொல்லே உபயோகிக்கப்படுகின்றது. The man came, The cow came, The machine came |
|
மரியாதைச் சொற்கள் |
தமிழ் மொழியில் மனிதர்களை மரியாதைப் படுத்தி சில வினைச் சொற்களை உபயோகிக்கின்றோம். மரியாதைக்காக அவரை "அதிபர் வந்தார்கள்" எனவும், அங்கு வேலை செய்யும் காவற்காரனை |
ஆனால், ஆங்கில மொழியில் அவ்வாறு மனிதர்களை மரியாதைப் படுத்துவதில்லை. எவர் எது செய்தாலும் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தாலும் அல்லது தாழ்நிலை, கீழ்நிலையில் இருந்தாலும் ஒரே விதமான வினைச் சொல்லே உபயோகிக்கப்படுகின்றது. வேலை செய்யும் காவற்காரனோ அல்லது சாதாரண உத்தியோகத்தரோ எவராயிருந்தாலும் ஒரே விதமான வினைச் சொல்லே உபயோகிக்கப்படுகின்றது. The principal came, The watcher came, The officer came |
|
ஒரு பொருள் பல சொற்கள் |
தமிழ் மொழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் உபயோகிக்கப்படுகின்றன. உதாரணம்:- |
ஆனால், ஆங்கில மொழியில் ஒரு பொருளுக்கு பெரும்பாலும் ஒரு சொல்லே உபயோகிக்கப்படுகின்றது. உதாரணம்:- Father Chair Sea |
மேற்கண்ட அட்டவணையின் மூலம் நாம், தமிழ் மொழியை விட ஆங்கில மொழி எவ்வளவு இலகுவான மொழி என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழியில் நாம் பல மாற்றங்களை ஏற்படுத்தியே பேசுகின்றோம். தமிழ் மொழி நமது தாய் மொழி என்பதால் இவ்வாறான மாற்றங்கள் நமக்கு தென்படுவதில்லை. ஏனெனில் நாம், தமிழ் மொழியைக் கற்பதன் மூலம் பேசுவதில்லை. இயற்கையாகவே பேசக் கற்றுக் கொண்டோம்.
ஆனால், ஆங்கில மொழியிலோ பெரும்பாலான சொற்களை எவ்வித மாற்றங்களுமின்றியே அவற்றை உள்ளவாறே உபயோகிக்கின்றோம். சொற்களில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது, அவற்றிற்கு முன்னால் தேவையானவற்றை மட்டும் இட்டுக் கொள்கின்றோம்.
எனவே, தமிழ் மொழியை விட ஆங்கில மொழி கற்பதற்கு எவ்வளவு இலகுவானது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறாயின் நம்மில் பலரால் ஆங்கிலத்தைக் ஏன் கற்றுக் கொள்ள முடியவில்லை? இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மாதிரி பாடங்களாகவும் குறிப்புகளாகவும் நாம் பின்வரும் பக்கங்களில் சுருக்கமாகக் காண்போம்.
எனவே, ஒவ்வொரு பக்கமாக 'க்ளிக்' செய்து எமது நவீன கற்பித்தல் முறையினை அறிந்து கொள்ளுங்கள்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com