Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 5
Using the English Verbs (ஆங்கில வினைச் சொற்கள் உபயோகிக்கப்படும் விதம்):
தமிழ் மொழியைப் பொறுத்தளவில், ஒரு வாக்கியம் "எழுவாய், செயப்படுபொருள், பயனிலை" எனும் ஒழுங்கில் அமைகின்றது. ஆனால், ஆங்கில வாக்கியமோ, "எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்" என அமைகின்றது. எனவே, ஆங்கில வாக்கியம் ஒன்றில் எழுவாய்க்கு அடுத்ததாக பெரும்பாலும் பயனிலை வினைச் சொல்லே அமைகின்றது.
இதன் பிரகாரம், "நான் காலையில் சந்தைக்குப் போகின்றேன்" எனும் வாக்கியம் ஆங்கிலத்தில் அமைவதாயின் அது, "எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்" எனும் ஒழுங்கில் அமைதல் வேண்டும்.
இதில் வரும் பயனிலையாகிய "போகின்றேன்" என்பது நிகழ் காலத்தில் இருப்பதால், இதற்கான ஆங்கில வினைச் சொற்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, "go" என்பது. மற்றது, "going" என்பது. இவ்வாறு இரண்டு சொற்கள் இருப்பதால் எதனை உபயோகிப்பது என்ற பிரச்சினை மாணவர்களுக்கு ஏற்படுகின்றது.
இதுதான் இன்று பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் குழப்பமும் தெளிவின்மையும் உண்டாவதற்கான பிரதான காரணமாகும். இதற்கான போதிய விளக்கம் பெரும்பாலான ஆங்கில வகுப்புக்களிலோ ஆங்கில பேச்சுப் பயிற்சிப் புத்தகங்களிலோ கொடுக்கப்படாததாலேயே பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இன்றிக் காணப்படுகின்றனர். எனவே நாம், இது பற்றிய சரியான விளக்கங்களை இங்கு காண முயற்சிப்போம்.
ஆங்கில மொழியில் வினைச் சொற்கள் நான்கு விதமான உருவங்களைக் கொள்கின்றன. அவை முறையே,
நிகழ் கால வினைச் சொற்கள் (Present Tenses),
இறந்த கால வினைச் சொற்கள் (Past Tenses),
நிகழ் கால எச்சங்கள் (Present Participles),
இறந்த கால எச்சங்கள்" (Past Participles)
என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான "காரியங்களு"க்காக உபயோகிக்கப்படுகின்றன. இவை என்னென்ன காரியங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன என நாம் அறிந்து கொள்வோமாயின் ஆங்கிலத்தை எவ்வித பிழைகளுமின்றி இலக்கண சுத்தமாக பேச முடியும்.
பின்வரும் அட்டவணையில் வினைச் சொற்கள் சிலவற்றின் உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
|
வினைச் சொற்கள் |
Present Tense |
Past Tense |
Present Participle |
Past Participle |
|
போ |
go |
went |
going |
gone |
|
வா |
come |
came |
coming |
come |
|
எழுது |
write |
wrote |
writing |
written |
|
வாசி |
read |
read |
reading |
read |
|
பேசு |
speak |
spoke |
speaking |
spoken |
|
சொல்லு |
tell |
told |
telling |
told |
இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில்,
'Present Tense' என்பன, ஒருவருடைய "வழமை, பழக்க வழக்கம், பண்பு, குணம், இயல்பு, தன்மை, இயற்கை நிகழ்வுகள், உண்மைகள், மனதில் ஏற்படும் மறைமுகமான விடயங்கள்" போன்றவற்றை எடுத்துச் சொல்வதற்கும்,
'Past Tense' என்பன "நடந்த விடயங்களை" எடுத்துச் சொல்வதற்கும்,
'Present Participle' என்பன "தற்போது நடந்து கொண்டிருக்கும் விடயங்கள், முன்னர் நடந்து கொண்டிருந்த விடயங்கள், இனிமேல் நடந்து கொண்டிருக்கப் போகின்ற விடயங்கள்" என்பவற்றை எடுத்துச் சொல்வதற்கும்,
'Past Participle' என்பன "நடந்திருக்கின்ற விடயங்கள், நடந்திருந்த விடயங்கள், நடந்திருக்கப் போகின்ற விடயங்கள், நடந்திருக்க வேண்டிய விடயங்கள்" போன்றவற்றை எடுத்துச் சொல்வதற்கும் உபயோகிக்கப்படுகின்றன.
இதன் பிரகாரம், நாம் முன்னர் எடுத்துக் கொண்ட "நான் காலையில் சந்தைக்குப் போகின்றேன்" எனும் வாக்கியம் ஒருவருடைய வழமையைக் குறிப்பிடுவதால், இதனை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்வதற்கு நாம் இங்கு 'Present Tense' உருவத்தையே உபயோகிக்க வேண்டும். எனவே இது, "I go to market in the morning" என ஆங்கிலத்தில் அமையும்.
ஆனால் ஒருவர், "நான் சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன்" எனக் கூறுவாராயின், அதனைத் தெரிவிக்க இவ்வாறு அவர் கூற முடியாது. அது பிழையான கூற்றாக முடியும். ஏனெனில் இது அவர் இப்போது "செய்து கொண்டிருக்கும் காரியத்தை"க் குறிப்பதாகும். எனவே, இதனைத் தெரிவிக்க அவர் 'Present Participle' எனும் உருவத்தினை உபயோகித்து, "I am going to market" என்றவாறே கூற வேண்டும்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com