Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடக் குறிப்பு - 1
"அவன்" "அவர்" என்பவற்றுக்கான வித்தியாசங்கள்:
தமிழ் மொழியில் நாம் ஒருவரை பல விதமாக அழைக்கின்றோம். உதாரணமாக, ஓர் ஆசிரியரை "அவர்" என அழைக்கின்றோம். ஒரு வேலைக்காரனையோ அல்லது ஒரு சிறுவனையோ "அவன்" என அழைக்கின்றோம். ஆனால், சிலரை மரியாதைப்படுத்தி அழைக்கின்றோம். உதாரணமாக, ஓர் அதிபரை அல்லது ஒரு மந்திரியை "அவர்கள்" என மரியாதைப்படுத்தி அழைக்கின்றோம். "அவர்கள்" என்பது ஒரு பன்மைச் சொல் என்பதற்காக ஓர் அதிபர் என்பவர் பலராகவோ அல்லது ஒரு மந்திரி என்பவர் பலராகவோ மாறிவிடமாட்டார். அவர் எப்போதும் ஒருவர்தான். ஆயினும், மரியாதைக்காக ஒருவரைப் பார்த்து "அவர்கள்" என அழைக்கின்றோம். இது, தமிழ் மொழியிலுள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஆனால், ஆங்கில மொழியிலோ எனில் அவ்வாறெல்லாம் மரியாதைப்படுத்தி அழைப்பதில்லை. அவர் எப்படிப்பட்டவராயினும் எழுவாயாக வருபவர் ஒருவராயிருந்தால், "He" எனும் ஒரே சொல்லைக் கொண்டே அழைக்கப்படுகின்றார்.
இதேவேளை நாம், "அவர்" எனும் சொல்லை ஆண்பாலுக்கு மட்டும் உபயோகிப்பதில்லை. அதனைப் பெண்பாலுக்கும் உபயோகிக்கின்றோம். உதாரணமாக, ஒரு சிறுமியை அல்லது வேலைக்காரியையோ அல்லது பிச்சைக்காரி ஒருத்தியையோ "அவள்" எனும் சொல்லைக் கொண்டே அழைக்கின்றோம். காரணம், அவர்கள் எல்லாம் பெண்பால் என்பதனாலாகும். ஆனால், நமது தாயையோ, மூத்த சகோதரியையோ, மாமியையோ அல்லது நமது ஆசிரியையோ அப்படி "அவள்" என அழைப்பதில்லை. இவர்கள் எல்லாம் பெண்பாலாக இருந்தும் நாம் அப்படி "அவள்" என அழைப்பதில்லை. அது மரியாதைக் குறைவானது என்பதனால் அவ்வாறு அழைக்காது, "அவர்" என அழைக்கின்றோம். எனவே, "அவர்" எனும் சொல் ஆண்களுக்கு மட்டும் உபயோகிக்கப்படுவதில்லை. மாறாக, மரியாதைப்படுத்துவதற்காக பெண்களுக்கும் அச் சொல் உபயோகிக்கப்படுகின்றது.
எனவே, ஆங்கில மொழியைப் பொறுத்தளவில் மரியாதைப்படுத்தல் என்பது கிடையாது. அங்கு ஓர் எழுவாய் ஆண்பாலா பெண்பாலா என்றவாறே பார்க்கப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்பாலாயின் "He" எனவும், பெண்பாலாயின் "She" எனவுமே நாம் உபயோகப்படுத்தல் வேண்டும்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com