Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 3
Objects (செயப்படுபொருள்):
தமிழ் மொழியைப் பொறுத்தளவில், "அவன்" எனும் எழுவாய் செயப்படுபொருளாக வரும்போது அது, "அவனை, அவனிடம், அவனுக்கு, அவனுக்காக, அவனுடன், அவனால்" என பல விதமாக மாற்றமடைகின்றது. ஆனால், ஆங்கில மொழியிலோவெனில் அவ்வாறன்று. "He" எனும் அவனைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லானது, "him" என மட்டுமே மாற்றமடைகின்றது. "him" எனும் இந்தச் சொல்லானது எப்போதுமே எவ்வித மாற்றத்தையுமே அடைவதில்லை.
மாறாக, "to, for, with, by" எனும் "Prepositions" களை தன் முன்னால் சேர்த்துக் கொள்கின்றது. எனவே, "அவனுக்கு" என்பது, "to him" எனவும், "அவனுக்காக" என்பது, "for him" எனவும், "அவனுடன்" என்பது, "with him" எனவும், "அவனால்" என்பது, "by him" எனவும் அமைகின்றதே அன்றி, தமிழைப் போல "him" எனும் அந்தச் சொல் உருமாற்றமடைவதில்லை. "to, for, with, by" எனும் சொற்களே அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன.
இதனை நாம் பின்வருமாறு அட்டவணைப்படுத்துவதன் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.
| அவன்
He |
அவனை
him |
அவனிடம்
him |
அவனுக்கு
to him |
அவனுக்காக
for him |
அவனுடன்
with him |
அவனால்
by him |
இங்கு நாம், "அவனை" என்பதற்கும், "அவனிடம்" என்பதற்கும் "him" எனும் ஒரு சொல்லே உபயோகிக்கப்படுவதை அவதானிக்கலாம். இது ஏனெனில், தமிழ் மொழியிலுள்ள "ஐ" உருபுக்கும் "இடம்" உருபுக்கும் ஈடான Preposition கள் ஆங்கிலத்தில் இல்லாததேயாகும். எனவே நாம், இவ்வாறான இடங்களில் வாக்கியங்களில் வரும் வினைச் சொற்களைப் பொறுத்து "அவனை" எனவோ, "அவனிடம்" எனவோ பொருள் கொள்ளல் வேண்டும்.
இதே போன்றே, "அவள்", "அது", "அவர்கள்", "அவைகள்" என்பனவும் பல விதமாக மாற்றமடைகின்றன. இவை எவ்வாறு மாற்றமடைகின்றன, அவற்றிற்கான ஆங்கில சொற்கள் எவ்வாறு உபயோகிக்கப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணையைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.
|
அவள் |
She |
அது |
It |
அவர்கள் |
They |
அவைகள் |
They |
|
அவளை |
her |
அதனை |
it |
அவர்களை |
them |
அவைகளை |
them |
|
அவளிடம் |
her |
அதனிடம் |
it |
அவர்களிடம் |
them |
அவைகளிடம் |
them |
|
அவளுக்கு |
to her |
அதற்கு |
to it |
அவர்களுக்கு |
to them |
அவைகளுக்கு |
to them |
|
அவளுக்காக |
for her |
அதற்காக |
for it |
அவர்களுக்காக |
for them |
அவைகளுக்காக |
for them |
|
அவளுடன் |
with her |
அதனுடன் |
with it |
அவர்களுடன் |
with them |
அவைகளுடன் |
with them |
|
அவளால் |
by her |
அதனால் |
by it |
அவர்களால் |
by them |
அவைகளால் |
by them |
இங்கு, "He" என்பது "him" எனவும், "They" என்பது "them" எனவும் மாறினாலும் "அவள்" என்பதைக் குறிக்கும் "She" என்பது "her" என மாற்றமடைந்திருப்பதை அவதானிக்கலாம். அதேபோன்று, "அது" என்பதைக் குறிக்கும் "It" என்பது, அதே விதமாகவே மாற்றமடையாமல் இருப்பதையும் அவதானிக்கலாம்.
அதேவேளை, "அவர்கள்" என்பதற்கும், "அவைகள்" என்பதற்கும் எனும் ஒரே சொல்லே உபயோகிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். இதற்கான காரணம், ஆங்கில மொழியைப் பொறுத்தளவில், எழுவாய்கள் ஒன்றுக்கு மேற்படும்போது அவை மனிதரா - மிருகமா, உயிருள்ளவையா - உயிரற்றவையா என பார்க்கப்படுவதில்லை. ஒன்றிற்கு மேற்பட்டால் அவற்றைக் குறிப்பதற்கு "They" எனும் சொல்லே எல்லாவற்றிற்கும் உபயோகிக்கப்படுகின்றது.
இதே விதமாக "நான்" எனும் எழுவாயும் "என்னை, என்னிடம், எனக்கு, எனக்காக, என்னுடன், என்னால்" என மாற்றமடைகின்றது. இது எவ்வாறு ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படுகின்றது என்பதை பின்வரும் அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.
|
நான் |
I |
|
என்னை |
me |
|
என்னிடம் |
me |
|
எனக்கு |
to me |
|
எனக்காக |
for me |
|
என்னுடன் |
with me |
|
என்னால் |
by me |
இங்கு, மற்றைய எழுவாய்களைப் போலன்றி, "நான்" என்பது, "என்னை" என வேறு விதமான சொல்லாக மாறுவதை அவதானிக்கலாம். இது போலவே ஆங்கிலத்திலும் "I" என்பது, "me" என வேறு விதமான சொல்லாக மாற்றமடைவதை அவதானிக்கலாம்.
இனி, பின்வரும் அட்டவணையைப் பார்ப்போம்.
|
நீ |
You |
நீங்கள் |
You |
நீர் |
You |
|
உன்னை |
you |
உங்களை |
you |
உம்மை |
you |
|
உன்னிடம் |
you |
உங்களிடம் |
you |
உம்மிடம் |
you |
|
உனக்கு |
to you |
உங்களுக்கு |
to you |
உமக்கு |
to you |
|
உனக்காக |
for you |
உங்களுக்காக |
for you |
உமக்காக |
for you |
|
உன்னுடன் |
with you |
உங்களுடன் |
with you |
உம்முடன் |
with you |
|
உன்னால் |
by you |
உங்களால் |
by you |
உம்மால் |
by you |
இங்கு, "நீ", "நீங்கள்", "நீர்" என எப்படி நாம் ஒருவரை அழைத்தாலும் ஆங்கிலத்தைப் பொறுத்த வரை "You" எனும் ஒரே சொல்லே உபயோகிக்கப்படுவதை அவதானிக்கலாம். "நீங்கள்" என்பது பலரைப் பார்த்து சொல்வதற்கு பயன்பட்டாலும், ஒருவரை மரியாதையுடன் அழைப்பதற்கும் நாம் உபயோகிக்கின்றோம். ஆனால் ஆங்கிலத்தைப் பொறுத்த வரையிலோ, அவ்வாறன்று! ஒருவராயிருந்தாலும் சரி, பலராயிருந்தாலும் சரி, மரியாதைக்குரிய வராயிருந்தாலும் சரி, தாழ்ந்த நிலையில் உள்ளவராயினும் சரி ஒரே விதமான சொல்லே ஆங்கில மொழியில் உபயோகிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com