Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 4
Possessive (உடைமைத் தன்மை):
தமிழ் மொழியில் நாம் ஒரு பொருளுக்கு ஒருவர் சொந்தக்காரராக அல்லது உடைமைக்காரராக இருந்தால் அதனை "அவருடைய" அல்லது "அவரது" அல்லது "அவரின்" அல்லது "அவரினது" என பல விதமாக கூறுகின்றோம். ஆனால் ஆங்கில மொழியிலோ அவ்வாறன்று! ஆங்கில மொழியில் இதனைக் குறிப்பதற்கு ஒரேயொரு சொல்லே உபயோகிக்கப்படுகின்றது.
உதாரணமாக, ஒருவருக்கு ஒரு புத்தகம் சொந்தமாக இருக்கின்றது என வைத்துக் கொண்டால், அப் புத்தகத்திற்கு அவர் உடைமைக்காரராக அல்லது சொந்தக்காரராக இருக்கின்றார். அதனை நாம் தமிழில், "அவருடைய புத்தகம்" அல்லது "அவரது புத்தகம்" என்போம். இதனை நாம் ஆங்கிலத்தில், "his" எனக் கூறுவோம். நாம் அதனை, "அவருடைய" அல்லது "அவரது" அல்லது "அவரின்" அல்லது "அவரினது" என எப்படிக் கூறினாலும், ஆங்கிலத்தில் "his" எனும் ஒரே சொல்லைக் கொண்டே "his book" என தெரிவிக்கின்றோம். இதே போன்றே ஏனையவற்றுக்கும் நாம் ஆங்கிலத்தில் உபயோகிக்கின்றோம்.
இதனை பின்வரும் அட்டவணையின் மூலம் நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.
|
என்னுடைய, எனது, என் |
my |
|
எங்களுடைய, எமது, எங்கள் |
our |
|
உன்னுடைய, உனது, உன் |
your |
|
உங்களுடைய, உங்களது, உங்கள் |
your |
|
உம்முடைய, உமது, உம் |
your |
|
அவனுடைய, அவனது, அவனின், அவனினது |
his |
|
அவளுடைய, அவளது, அவளின், அவளினது |
her |
|
அதனுடைய, அதனது, அதனின், அதனினது |
its |
|
அவர்களுடைய, அவர்களது, அவர்களின், அவர்களினது |
their |
|
அவைகளுடைய, அவைகளது, அவைகளின், அவைகளினது |
their |
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com