Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 2
Sujects (எழுவாய்கள்):
எழுவாய்கள் என்பன ஒரு காரியத்தைச் செய்பவற்றைக் குறிக்கும். "நான், நாங்கள், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், அது, அவைகள்" போன்றன எழுவாய்கள் ஆகும். இவற்றை ஆங்கில இலக்கணத்தில் "ஒருமை, பன்மை" என இரண்டு விதமாக பிரிப்பார்கள். இதனை நாம் பின்வரும் அட்டவணையின் மூலம் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
|
ஒருமை |
பன்மை |
|
நான் - I |
நாங்கள் - We |
|
நீ - You |
நீங்கள் - You |
|
அவன் - He அவள் - She |
அவர்கள் - They |
|
அது - It |
அவைகள் - They |
இதன்படி ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒருமையாக இருந்தால் அதற்கு "is, was, has" என்பவற்றையும், பன்மையாக இருந்தால் "are, were, have" என்பவற்றையும், அத்துடன், ஒருமைகள் வரும்போது "go, come, speak" போன்ற வினைச் சொற்களுடன் ஒரு "s" அல்லது "es" ஐயும் அதனுடன் சேர்க்க வேண்டும் என ஆங்கில இலக்கண வகுப்புக்களிலும் ஆங்கில பேச்சுப் பயிற்சிப் புத்தகங்களிலும் கற்பிக்கின்றனர்.
இதன்படி, "He is a boy, She has a book, It was a table, He goes there, She comes here" எனும் வாக்கியங்களுக்கு இவ் விதி நன்கு பொருந்தி வருகின்றது.
ஆனால், "நான்" எனும் ஒருமை வரும்போது ஏன் "நான் ஒரு மாணவன்" என்பதற்கு "I is a student" என வருவதில்லை;
"நான் ஒரு பேனா வைத்திருக்கின்றேன்" என்பதற்கு "I has a pen" என வருவதில்லை;
"நீ ஒரு பையன்" என்பதற்கு "You is a boy" என வருவதில்லை;
"நீ ஒரு பேனா வைத்திருக்கின்றாய்" என்பதற்கு ஏன் "You has a pen" என வருவதில்லை;
"நான் அங்கே போகின்றேன்" என்பதற்கு ஏன் "I goes there" என வருவதில்லை;
"நீ இங்கே வருகின்றாய்" என்பதற்கு ஏன் "You comes here" என வருவதில்லை;
இவை எல்லாம் "ஒருமைகள்" தானே? மாறாக,
"You are a boy" என்றும்
"You have a pen" என்றும்,
"I go there" என்றும்,
"You come here" என்றும்தானே வருகின்றன. ஆங்கில இலக்கண விதிகளின்படி இவைகள் "பன்மை"களுக்குத்தானே வர வேண்டும். இங்கு இவைகள் "ஒருமை"யாக இருக்க எப்படி இவ்வாறு வர வேண்டும் என்ற கேள்விகள் பல மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆங்கிலம் கற்பதில் ஆர்வக் குறைவை உண்டாக்கி இறுதியில், ஆங்கிலக் கல்வியின் மீதே ஒருவித வெறுப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இதற்கான காரணம், "நான், நீ" என்பன "ஒருமைகள்" என வகைப்படுத்தப்படுவதனாலாகும். ஆனால், ஆங்கில மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் எழுவதில்லை. காரணம், அவர்கள் பிறந்த நாளிலிலிருந்தே செவியாற கேட்டும் வாயாற பேசியும் வருவதினாலாகும். தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டிருக்கும் எமது மாணவர்களிடையேதான் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகின்றன. இக் குழப்பத்தினை நீக்கி மாணவர்கள் மத்தியில் தெளிவான விளக்கத்தைக் கொடுப்பதற்காக நாம் புதிய நவீன முறையொன்றினை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டு வருகின்றோம்.
நாம் எமது கற்பித்தலில் "ஒருமை, பன்மை" என எழுவாய்களை வகைப்படுத்துவதில்லை. மாறாக, மாணவர்கள் இலகுவாக இப் பிரச்சினையை அணுகுவதற்காக, "நான், நீ" என்பவை தவிர்ந்த ஏனைய யாராவது "ஒருவர்" அல்லது "ஒன்று" ஒரு காரியத்தைச் செய்யுமானால், நிகழ் காலத்தில் "is, has, s, es " என்பவற்றையும், இறந்த காலத்தில் "was" என்பதையும் சேர்க்க வேண்டும் என கற்பிக்கின்றோம். இதனால் எமது மாணவர்கள் எவருக்குமே இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதில்லை.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com