Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடம் - 6
Making English Sentences (ஆங்கில வாக்கியங்கள் அமைத்தல்):
பல மாணவர்கள் எத்தனை ஆங்கில வகுப்புக்களுக்கு ஆங்கிலம் கற்கவென சென்றிருந்தாலும் ஒரு வாக்கியத்தையேனும் சுயமாக ஆங்கிலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.
உதாரணமாக, பின்வருமாறு தமிழில் தாம் நினைப்பதை ஆங்கிலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.
"நான் மாமாவைப் பார்க்க நேற்று தந்தையுடன் பஸ்ஸில் வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு போனேன்" என மனதில் நினைப்பதை ஆங்கிலத்தில் எவ்வாறு அமைப்பது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.
காரணம், அதனை "I uncle to see yesterday with father in the bus from home to hospital went" என ஆங்கிலத்தில் அமைத்தால் அது பிழையானது என அவர்களுக்குக் கூறப்படுகின்றது. எனவே, தமக்கு இந்த ஆங்கில மொழி வரவே வராது என முடிவுகட்டி விடுகின்றனர்.
இவ்வாறு ஏன் அவர்கள் ஆங்கிலத்தில் அமைக்கிறார்கள் என்றும், அது உண்மையிலேயே எவ்வாறு ஆங்கிலத்தில் அமைய வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதையும் நாம் சற்றுக் கவனிப்போம்.
இவ்வாறு அவர்கள் ஆங்கிலத்தில் அமைப்பதற்குக் காரணம்,
"நான்" என்றால் "I",
"மாமாவை" என்றால், "uncle",
"பார்ப்பதற்கு" என்றால், "to see",
"நேற்று" என்றால், "yesterday",
"தந்தையுடன்" என்றால், "with father",
"பஸ்ஸில்" என்றால், "in the bus",
"வீட்டிலிருந்து" என்றால், "from home",
"ஆஸ்பத்திரிக்கு" என்றால், "to hospital",
"போனேன்" என்றால், "went" என ஆங்கிலச் சொற்கள் இருப்பதால், இப்படித்தானே "I uncle to see yesterday with father in the bus from home to hospital went" என ஆங்கில வாக்கியம் அமைய வேண்டும் என எண்ணுகின்றனர். இதுவே இதற்கான உண்மையான காரணமாகும்.
ஆனால், இதற்கான ஆங்கில வாக்கியமோவெனில் வேறு விதமாக அமைகின்றது. அது, "I went to hospital from home by bus with father yesterday to see uncle" என ஆங்கிலத்தில் வருகின்றது. இவ்வாறு ஆங்கில வாக்கியம் தமிழ் வாக்கியத்திற்கு எதிர் மாறாக அமைவது ஏன்? இதற்கு ஏதாவது அமைப்பு முறைகள் உள்ளனவா? என சற்றுக் கவனிப்போம்.
தமிழ் வாக்கியத்தின் அமைப்பு முறையும் ஆங்கில வாக்கியத்தின் அமைப்பு முறையும் எதிர் மாறாக அமைகின்றன என ஏற்கனவே நாம் அறிந்திருக்கின்றோம்.
தமிழில் பயனிலை வினைச் சொல்லானது இறுதியில் வர, ஆங்கிலத்தில் அது இரண்டாவதாக வருகின்றது என நாம் முன்னர் பார்த்தோம். அதற்கிணங்க இங்கு "போனேன்" என்பதற்கான "went" என்பது இரண்டாவது அமைக்கின்றது. இனி மூன்றாவதாக "to hospital" என்பது அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். இதற்கான காரணம் என்ன? இங்குதான் நாம் சில விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆங்கில வினைச் சொல்லானது பல கேள்விகளைக் கேட்கக் கூடியது.
உதாரணமாக,
"போ" என்பது முறையே,
"எங்கே",
"எங்கிருந்து",
"எதில்",
"யாருடன்",
"எப்போது",
"ஏன்" என ஆறு கேள்விகளைக் கேட்கக் கூடியது.
இதற்கமையவே,
"எங்கே" என்பதற்கு, "to hospital" என்பதும்,
"எங்கிருந்து" என்பதற்கு, "from home" என்பதும்,
"எதில்" என்பதற்கு, "by bus" என்பதும்,
"யாருடன்" என்பதற்கு, "with father" என்பதும்,
"எப்போது" என்பதற்கு, "yesterday" என்பதும்,
"ஏன்" என்பதற்கு, "to see" என்பதும் வருகின்றன.
இறுதியான, "ஏன்" என்பதற்கான விடையாக, "to see" என்பது வர, இதுவும் ஒரு வினைச் சொல் என்பதனால் அது, தானும் ஆறு கேள்விகளை முறையே கேட்க ஆரம்பிக்கும்.
அதன்படி அது முதலாவது கேள்வியாக, "யாரை" எனக் கேட்கின்றது. இதற்கான விடையாகவே இங்கு, "uncle"என்பது வருகின்றது. இந்த கேள்வி - பதில் முறை மூலம் நாம் ஆங்கில வாக்கியங்களை அமைத்துப் பழகுவோமானால் எவ்வித இலக்கண பிழைகளுமின்றி ஆங்கிலத்தில் பேசலாம்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com