Research Centre for Efficient Teaching Methods
Your right centre for learning and speaking English easily and effectively!
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
மாதிரி பாடக் குறிப்பு - 2
ஒரே சொல், வித்தியாசமான பாவனையில்:
நமது தாய் மொழியான தமிழ் மொழியில் உபயோகிக்கப்படும் சில தமிழ்ச் சொற்கள் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான சொற்களில் "தங்கள்", "தாங்கள்" என்பனவும் சிலவாகும். இந்தச் சொற்கள் யாரைக் குறிக்கின்றன என்பது, உபயோகிக்கப்படும் வாக்கியத்தைப் பொறுத்ததாகும்.
உதாரணமாக, "தங்களது நண்பர்கள் அங்கே வந்திருக்கிறார்கள்" என்னும் வாக்கியத்தைப் பொறுத்தளவில் "தங்களது" என்பது "உங்களது" என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஆனால், "தங்களது நண்பர்களை அவர்கள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்" எனும் வாக்கியத்தில், "தங்களது" என்பது "அவர்களது" என்பதைக் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, "தாங்கள் கூட்டத்திற்கு தவறாது சமூகமளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்" எனும் வாக்கியத்தில், "தாங்கள்" என்பது "நீங்கள்" என்பதைக் குறிக்கின்றது. எனவே, தங்கள், தாங்கள் எனும் சொற் பிரயோகங்கள் வாக்கியங்களில் அவை யாருக்காக உபயோகிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழில் உபயோகிக்கப்படும் "தங்கள்", "தாங்கள்" எனும் தமிழ் சொற்களுக்கு ஈடான சொற்கள் ஆங்கில மொழியில் கிடையாது. எனவே நாம், அச் சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றது என்பதை அறிந்து அவற்றுக்கு ஏற்ற விதமான ஆங்கிலச் சொற்களை உபயோகிக்க வேண்டும்.
மேற்கண்ட வாக்கியங்களில், "உங்களது" என்பதற்கு "your" எனும் ஆங்கிலச் சொல்லும், "அவர்களது" என்பதற்கு "their" எனும் ஆங்கிலச் சொல்லும் உபயோகிக்கப்பட வேண்டும்.
| பக்கம் - 1 | பக்கம் - 2 | பக்கம் - 3 | பக்கம் - 4 | பக்கம் - 5 | பக்கம் - 6 | பக்கம் - 7 | பக்கம் - 8 | பக்கம் - 9 | பக்கம் - 10 |
For Free Lessons: Email: For Comments:
www.speakinenglishtoday.tk speakinenglishtoday@gmail.com www.speakinenglishtoday.blogspot.com